பாரதியார் இன்றிருந்தால்
என் தாய் தமிழ்நாடே
என் தாய் தமிழ்நாடே
வணங்குகிறேன் உன் பாதம் தொட்டு,
வணங்குவது இளங்கவிதை மொட்டு...
தந்துவிட்டேன் என் மனதை
வந்துவிட்டன உன் மழலை...
என் பாரதி அவன் தீச்சொற்கள் கொண்டு
உனக்கு சூடுகிறேன் பூமாலைச்செண்டு...
மீண்டும் வந்தேன்
உயிர் மீட்டு வந்தேன்
என் தமிழ் மகளே
உன்னை பாடவந்தேன்..
உன் மழலையின் குரல் கேளடியோ
உன் ஆழ்துயில் கொஞ்சம் நீக்கடியோ..
உன் கருவிழி வியர்வையை துடைத்திடவே
என் இருவிரல் எழுதும் கவிதையினையே..
தமிழன் என்று சொன்னதும்
தலை நிமிர்ந்து நின்றதும்
ஈரம் இழந்து போனதோ
என் தமிழன் மடிவதோ?
காலம் மாறிப்போனதோ
காலன் அவன் கையிலே
தமிழன் எனும் பொம்மைதான்
பிடித்தமாகி போனதோ?...
விவசாயநிலத்தில்
வெடிகுண்டு விதைகள்
அமோக விளைச்சல்
கல்லறைப்பெட்டிகளில்
மனிதனின் உடல்கள்..
உலகுக்கே சோறுபோட்ட
என் உழவர்க்கூட்டம்
கையேந்தி நிற்கிறது
ஒருபிடி நெல்லிற்கு..
பண்பாடு
அது சிறகில்லா பறைவயானது...
பத்துபேத்த சுமந்துபுட்டு
பத்துமாசம் சுமந்ததுக்கு
ஒத்தவேல வயத்த நிரப்புது
இந்த விலைமகள் கூட்டம்..
கலாச்சாரம்
அது மணலிள்ள கடற்கரையானது..
இல்லையென்று சொல்ல
ஆயிரம் உன்னிடத்தில்,
அது அத்தனையும் சொல்ல
வார்த்தைதான் இல்லை என்னிடத்தில்..
இமயம் முதல் குமரிவரை
செழிப்பாய்தான் நீ இருக்கிறாய்,
உன் மழலையிடத்தில்
வறுமைதான் செழிப்பாய் இருக்கிறது...
என் தமிழ் மகளே,
என் பாட்டுக்கும்
பரிசொன்று தாரீரோ,
என் வயிற்றுக்கும்
பசியோன்று இல்லையோ?..
பரிசாய் வேண்டாம் பொன்னும் பொருளும்,
ஏழையின் வயிற்றில் ஒருபிடிசோரும்
விலைமகள் உடலுக்கு சற்றே ஓய்வும்
வெடிகுண்டின் மீது அமைதியும்
எனக்கு பரிசாய் தந்துவிடு...
என் தமிழ்மகளே
உன் மழலையின் பசியினை நீக்குவதற்கு
காணிக்கையாய் எற்றுக்கொள்ளடி
இந்த பாமாலை வரிகளை..
அன்புடன்
ப.சுரேஷ்..