புத்தம் புதிதாய்
அறியாததை அறியும் வரை
எல்லாம் புதிதுதான்,
புரிந்த அத்தனையும்
பழமை என்பேன்
புரியாததை
புதுமை என்பேன்...
மண்ணுக்கும் மழை புதிதுதான்
முதல்மழை பெய்யும்பொழுது,
கடலுக்கும் அலை புதிதுதான்
முதல அலை வரும்போது,
நானும் புதியவன்தான்
மண்ணில் பிறக்கும்போது..
பருகப்பருக பாலும் புளிக்கும் என்பார்கள்
எனக்கும் புளித்து
எனக்குள் இருக்கும் என்னை...
ஆம்,
மாற்ற நினைக்கிறேன்
புத்தம் புதிதாய்
இந்த உலகத்தை அல்ல
நானாகப்பட்ட என்னை...
நான் என்பவன்
உழைக்க தெரிந்தவன்
பிழைக்க தெரிந்தவன்..
சிந்திக்க தெரிந்தவன்
சாதிக்க தெரியாதவன்..
இப்படி நானாகப்பட்ட நான்
எனக்கு வேண்டும் புத்தம் புதிதாய்...
உண்மையான தோழனும் தோழியும்
எனக்கு இல்லை,
காரணம்
யாரிடமும்
உண்மையாய் இருந்ததில்லை
நான் ...
என்னிடத்தில் பிறரும்
பிறரிடத்தில் நானும்
உண்மையாய் இருக்க
வேண்டும் எனக்கு
புத்தம் புதிதாய் நான்...
பழைய பகை மறக்க
இழந்த நட்பை மீட்க
வீழ்ந்த இடத்தில் பறக்க
வேண்டும் எனக்கு
புத்தம் புதிதாய் நான்...
உலகம் என்பது நான்
நான் என்பது உலகம்,
நான் மாற நினைக்கிறேன்
உலகம் மாறும்
என்ற நம்பிக்கையில்..
நான் உலகை மாற்ற நினைக்கவில்லை
நானகப்பட்ட என்னை
மாற்றிக்கொள்ள நினைக்கிறன்
புத்தம் புதிதாய்...
அன்புடன்
ப.சுரேஷ்..