பெத்தவளின் பாசம்...
பத்துமாசம் சுமக்கும்பிள்ளை
பத்திரமா வந்திறங்க
பெத்தவளும் படும்பாடு
கொஞ்சமில்ல நஞ்சமில்ல...
அப்பன் குடுத்த உசுருக்கு - தன்
உதிரம் குடுத்து உருவம் தருவா...
பிஞ்சி இதயம் நோவும்முன்னு
தன்னிதயதையே
உனக்கும் செத்து துடிக்கவெப்பா...
தன்னிதயம் துடிக்கும்போதும்,
தான்
மூச்சிக்காத்து வாங்கும்போதும்
உண்டாகும் அழுத்தம்கூட - உன்ன
அண்டாம இருக்கணும்னு - தன்
அர சான் வயுத்துக்குள்ள
பணிக்குடமெனும்
அண்டத்தையே உண்டுப்பன்னி - உன்ன
அலுங்காம பாத்துக்குவா...
குலுங்கி நடந்துடலும் - தன்
குலசாமி உடன்ஜிடும்னு
பக்குவமா நடந்துடுவா - உன்ன
பதறாம பாத்துக்குவா...
மண்படாம நீ இருப்ப - உனக்கு
மண்சத்து வேணுமுன்னு
மண்ணைவாரி மென்னுடுவா - கறிச்
சாம்பலையும் தின்னுடுவா...
பொரக்கபோற புள்ள நீயும்
பொட்டபுள்ள ஆனாலும்,
ஆண்புள்ள ஆனாலும்
அளவில்லாத பாசத்தை - உன்
முகம் பாக்காமலே தந்திடுவா...
மகப்பேறு வரும்வரைக்கும்
மருத்துவச்சி சொல்லும் சொல்லே
மந்திரமா தினமும் எண்ணி
கண்மணி உன்ன
மலரைப்போல காத்திடுவா...
கண்ணே...
நீ
வெளியவர எண்ணும்போது
வலியாள துடித்துடுவா
வாய்விட்டும் அழுதிடுவா...
மண்ணில் வந்து விழுந்திடவே
மனம்நொந்து நீ அழுவ...,
மாளிகையை விட்டிறங்கி - இந்த
மண்ணில் வந்து விழுந்தோமென்று...
நீ
அழுற சத்தம்கேட்டு - உன்
தாய் அழுற சத்தம் நிக்கும்...
தான்பட்ட கஷ்டத்தெல்லாம்
தன்புள்ள கண்டதால
தரணியில பொறந்ததுமே
எனக்காக அழராண்டி - என்
குலதெய்வம் அழராண்டி - என
பெத்தபுள்ள அழரதப்பாத்து
புன்னகையை சிந்திடுவா - சூரியனை கண்ட
செந்தாமரைய பூத்திடுவா...
அவ பெத்ததோட விட்டுடலையே,
தன் சுத்தமான ரத்தத்தையே - உனக்கு
தாய்ப்பாலா தந்திடுவா...
பால் உண்ண நீ மறுத்தா - அந்த நிலாவையே
நீ உண்ண அழைச்சிடுவா...
நீ உண்ணும் அழகைப்பத்தே - தங்கம்
தான் உண்ண மறந்துடுவா...
தான் உண்ண மறந்தாலும்
தன்மார்பில் - உன்
பிஞ்சி வாய் பட்டதுமே
வற்றாத பாலார - தன்
மெய் மறந்து சுரந்திடுவா...
புரியாத சொல்லும் சொல்லி
நீ பேசும் அழகை கேட்டு - அதையே
புது
கவிதையாக எண்ணி எண்ணி - நாள்
பொழுதெல்லாம் சொல்லி ரசிப்பா...
நீ
எத்தி வைக்கும்
சப்பாணி நடையையும் - அந்த
இந்திரனின் நடனத்தோடு
ஒப்பிட்டும் பேசிடுவா...
நீ சிரிச்சி பாத்தாலே - தன்
சிந்தையெல்லாம் மறந்து நிப்பா...
பெத்தபுள்ள நீ அழுதா - அவ
எந்தவேல செய்தாலும்
அதை
அப்படியே விட்டுவந்து
அன்போடு உன்ன அள்ளி - தன் மார்போடு
அனைத்துக்கொல்வா...
கண்ணே
கண்கலங்கி நீ நின்னா - அவ
இதயமே இடிஞ்சி நிப்பா...
நீ thoonga நினைக்கும்போது
உன்னை - தன்
தோள்மேல போட்டுக்கிட்டு - உன்
சொந்தங்களின் உறவை சொல்லி - உனக்கு
தாலாட்டா பாடிடுவா...
நீ தூங்கும் அழகைப்பாத்து
தன்னிரண்டு கையாள
உன்னிரண்டு கன்னங்களை தடவியே
உனக்குப்பட்ட
கண்திருஷ்டியை - தன்
கை விரலால எடுத்திடுவா...
உன்
தேவையெல்லாம் தெரிஞ்சிக்குனு - உன்ன
தேவதையா காத்திடுவா...
இவையெல்லாம் ஒன்னு ரெண்டு
தெய்வம் அவ சேவையில...
எத்தனையோ இன்னும் உண்டு
அத்தனையும் சொல்லனும்னா
ஆயுள் நூறு வேணுமப்பா...