கார் மேகம்

நீர் தாங்கி வானம் பறக்கும் குவளை!
அடிக்கடி பார்க்க முடியாதது தான் கவலை;

வானத்தின் கருப்பு பஞ்சுமிட்டாய்!
காற்றடித்தால் பறந்து விடும் சிட்டாய்;

இருள் தரும் சூரியனே!
மழையை அள்ளித்தரும் கர்னனே;

சிறகில்லாமல் பறக்கிறாய்,
எங்களுக்கு வாழ்வாதாரம் தந்து இறக்கிராய்;

பட்டுமேனி கார்மேகம்!
ஐயோ கடலையே குடுக்கும் உன் தாகம்;

மண்ணின் மேல் நீ கொண்ட மோகம்
கண் நீர் சிந்தி குளிக்க வைக்கிறாயே?

ஏ மேகமே நீ ஆணா,
இல்லை பெண்ணா?

காற்று பட்டு உடல் சிலிர்த்து
நீர் சிந்தி வெட்கப்படும் பெண்ணா?

மேகங்கள் ஓடு மோதி
பலம் காட்டும் ஆணா??

பாலினம் எனக்கெதற்கு ??
உயிர் இனமே கடமை பட்டிருக்கிறோம் உனக்கு;

வானத்தில் நீ, நீ உன் உடல் தரும் ஓவியம்
சிறிது நேரத்தில் மறைந்து விடுகிறதே உன் காவியம் ?????

சூரியனும் ஒளிகிறதே உன் பின்னே,
வெட்கத்தில் முகம் சிவந்து ......

இரவு பகல் எப்பொழுதும் அலைந்து திரியும் உனக்கு உறக்கமில்லை ,
மாசு படுத்தி உன்னையே கொள்ளும்
எங்களுக்கோ இரக்கமில்லை !

பச்சை பசும் மரங்களுடன் நீ கொண்ட
காதலை நான் அறிவேன்........

காற்றுக்குள் முத்தங்கள் நிரப்பி
உனக்கு தூது விடும் அழகிய மரம்!

அந்த அன்பினால் முகம் கருத்து
நீ தந்த அன்பு முத்த மழை மரத்தின் உடலெங்கும் ...

சல சல வென அதன் சத்தம் என்
இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஓர் யுத்தம்

பொறாமை கொள்ள வைக்கும் உன் காதல் பாசம்
உன் காதலனை கொன்று நங்கள் செய்வது மோசம்!

வானத்தில் பூக்கும் கருப்பு வெள்ளை பூவே ...
தனித்தனியாய் பிரிந்து நிற்கும் தீவே...

நீ படுத்துறங்க பெரிய நீல மெத்தை ...
பசி எடுத்தால் கருநீல நில பழரசம்!

வெள்ளை கருப்பாய் மாறும் மாயம்
நீ இறந்தால் எங்களுக்கு காயம்!

செயற்கையாக பெய்ய வைக்க போகிரர்கலம் மழை
நீ எங்கள் உயிர் உடமை கிழியாமல் காக்கும் இழை

இறுதியாய் நாங்கள் இனி திருந்திககொள்கிறோம்
மேகமே என்றுமே நீ பூத்து குலுங்க மறவாதே!
எங்கள் வாழ்வாதாரம் அழிய காரணமாகாதே..

என்றும் உன்னை எதிர்பார்க்கும் ------ பாரி

எழுதியவர் : PariE (18-Aug-12, 7:12 pm)
பார்வை : 1293

மேலே