வாரா நாழிகை
அறியாமல் வந்து
அறிமுகம் ஆனோம்
அருகருகே இருந்து
ஆறுதல் தந்தோம்
புத்தாண்டு தினத்தை
புதுமையாய் கொண்டாடினோம்
புசிப்பதையும் நமக்குள்
பகிர்த்து கொண்டோம்
பிறந்த நாளின் இரவுகள் - விடுமுறையில்
பிரியும் நாளின் மாலை பொழுதுகள்
ஒரு போர்வையில் ஐந்து உறக்கம்
ஒரு அறையில் ஐந்து மின்மினி
அழுதாலும் சிரித்தாலும் ஒரே ஓசையில்
ஆயுள் முழுவதும் அலைந்தாலும்
அமையாத ஒற்றுமை
அலைந்தே திரிந்தாலும் இனி அமையுமோ
இந்த நாழிகை ...............