"மழையில் நாங்கள்"kavipriyan
மழை மேகத்தால்
மாலை 7 மணியாக
காட்சியளிக்கும்
மதியம் 2 மணி....
அந்நேரம் நானும்
அவளும் சாலையோரம்
நடந்துசெல்கிறோம்....
சாரல் மழை
தொடங்கியது
ஒதுங்க இடம்
தேடுவதற்குள்
மாமழை பெய்தது...
எங்கும் செல்ல
முடியாமல்
அருகில் இருந்த
மரத்தோரம்
ஒதுங்கி நின்றோம்.....
அந்த குளிர்ச்சியான
சூழ்நிலையில்
அவள் சுவாச
காற்றுமட்டும்
பாலைவன தென்றலாக
என் மீது மோதியது
அவள் கண்களை
ஒரு நிமிடம்
உற்று பார்த்தேன்
என் மீது விழும்
மழைத்துளியை கூட
மல்லிகை பூவாக உணர்ந்தேன்...
அவள் கண்களால்
மௌன மொழி
கொண்டு சொன்னால்
நமக்கு வாழ்நாள் முழுவதும்
மழைக்காலமாகாதா
என்று.....
நானும் மௌனமாய்
சொன்னேன்
உன் உடலுக்கு மட்டும்
எந்த கெடும் வராது என்று
மழைத்துளிகளை
சொல்லச்சொல்
மேகத்தை நிரந்தரமாக
அழவைக்கிறேன் என்று....
மல்லிகை பூவாக
மலர்த்தது அவள்
மௌனப்புன்னகை....
by
kavipriyan