அரசியல்வாதி

சில லட்சம் முலதனம்
பலகோடி ஆதாயம் !
சிரிக்கவைக்கும் பேச்சு
சிந்தனைக்கு
தேவையில்லா விஷயம்
தெரிந்திருந்தால் போதும் !
அரசியல் வியாபாரம்
அமோகம் ஆகும் !

அஷ்டலட்சுமி கூடிவரும்
ஐஜ்வர்யம் தேடிவரும்
அடியாள் கூட்டம்
ஓடிவரும் !

அடுத்த தேர்தலில்
அவர்தான் எம் எல் ஏ
அப்படியே அமைச்சர் !
அனாலும் படிப்பு
ஆறாம் வகுப்புதான்
அதனால் என்ன ?
மான்புமிகுக்கு
மாவட்ட ஆட்சியர்
மரியாதை

எழுதியவர் : (26-Aug-12, 7:34 pm)
பார்வை : 196

மேலே