சாபக்கேடு

பௌத்தத்தின் பஞ்ச சீலம்
பாசாங்குகளுக்குள் மண்டியிட்டு
வேசங்கள் பல தரித்து
விரட்டுகின்றது
தாய்மண்ணை விட்டு,

மதத்தின் பெயர் சொல்லும்
மதிகெட்ட அரசியல்
அத்துமீறல் பல செய்து
அடிக்கின்றது ஏழை வயிற்றில்,

மானுடம் தழைக்கவென
புத்தன் புகட்டிய
புதுச்சிந்தனைகள்
வேற்றுருக்கொண்டு
வேரறுக்கின்றன
விடியலின் சுவடுகளை,

அதிகாரக் கத்திகளில்
அல்லாடும்
அடிமை வாழ்வு
மரணத்தின் விளிம்புகளில்
தேடுகின்றது அயல்தீவு,

இது எங்கள் சாபம்
யார் தீர்ப்பார் சோகம்?
புத்தன் வருவானா
புதுச்சீலங்களுடன்?
திரிபுற்ற பீடகங்களை
திருத்தி எழுதவென,
தடம்மாறிய பௌத்தத்தை
திடமாக செதுக்கவென,
மனம்மாறிய மனிதர்களை
மறுபடியும் திருத்தவென
புத்தன் வருவானா?
புது சிந்தனை புகட்டுவானா?.......

எழுதியவர் : S.Raguvaran (31-Aug-12, 8:46 pm)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 155

மேலே