எங்கே போகுது நாகரீகம்?
அழகான நகரம்...
ஆடம்பரமான ஒரு புடவைக்கடை...
பெரியதொரு விளம்பர பலகை...
ஆடைக்கு பஞ்சமான நிலையில்
அரை நிர்வாணமாக...
ஒரு மாடல் அழகி..!
புடைவைக் கடையிலா இப்படி....?
அழகான மனைவியை…
அழைத்து செல்கிறான்
அவளது கணவன்....
அங்கங்கள் அனைத்தும்
அனைவருக்கும் காட்சி தரும்படி...
அடடா...பாதியை பார்பவர்கள் அனுபவிக்க
மீதி தான் உனக்கு மடையா...!
இது தான் உன் நாகரீகமா?
அது கூட பரவாயில்லை என
பயந்து போய் பார்க்க வைக்குறார்கள்
சில "பெற்றோர்கள்"அரை குறையாய் -
"ஆடை எங்கே அம்மணியே?"என
கேட்கவைக்கும் நிலையில் ...
அப்பனின் கை பிடித்து நடக்கிறார்கள்
"அழகான செல்ல பிள்ளைகள்"...!
அப்பனே...இது தான்
உன் வழிகாட்டலோ?
அதை விட மோசமாய்
கடவுளை கூட கதிகலங்க வைக்கும் படி
கடவுள் தரிசனத்துக்கு வருகிறார்கள்
சில "பக்தைகள்"...
பாவம் அவர்களுக்கு
"ஆடை வாங்க உதவுமாறு"
கடவுளிடம் வரம் கேட்க
வந்திருப்பார்களோ?
விகாரை தோரும் விகாரங்கள்...
(கோவில்களும் பள்ளிகளும் விதிவிலக்கல்ல)
உள்ளாடைகளை துவைத்து
வீட்டு முற்றத்தில் இருக்கும்
கொடியில் போட கூட
கூச்சமாய் இருக்கிறது எங்களுக்கு...
நீங்கள் எப்படி உள்ளாடையை விட
குறைவாக உடுத்திக்கொண்டு
உலா வருகிறீர்கள்...?
பெண்களே ஏன் இந்த கொடுமை...?
ஒன்றுமே இல்லாத
கையை மூடிக்கொண்டு
அருகில் இருபவரிடம்
கேட்டு பாருங்கள்
"இதற்குள் என்ன இருகின்றதென"
அவர் உள்ளத்தில் அதைத்
தெரிந்து கொள்ள இருக்கின்ற
துடிப்பை புரிந்துகொள்வீர்கள்...
(புரிந்து கொள்ளுங்கள்)
நாகரீகம் என்பதற்கு
உங்கள் அகராதியில்
இவை தானா உள்ளடக்கம் ?
(விதிவிலக்கான பெண்கள் கொஞ்சம் விலகி இருங்கள் இது எல்லா பெண்களுக்குமானதல்ல)
(நாகரீக கெடுதல்களில் அங்கம் வகிக்கும் ஆண்கள் பற்றி வேறொரு பதிவில் பேசலாம்.இது கவிதையும் அல்ல கட்டுரையும் அல்ல)