பேருந்து நிலைய திரைப்படம்

பேருந்தின் ஜன்னலோர திரைப்படம்

ஏழை இளம் தாய் தன் சிறுமியுடன்
படம் ஆரம்பம் !

தன் மகளை ஆசையாய் கொஞ்சுகின்றால்
இதுதான் பாசம் !

கூடவே ஒரு சிறு துண்டொன்று தரையில்
விரித்தபடி வினோத பிச்சைக்கு தன்
சிசுவை தயாராக்குகின்றாள் !

பேருந்து நிலைய கண்கள்
அவள்மேல் !

தம்பட்டம் ஒன்றை அடித்தபடி
ஆரம்பிக்கின்றாள் !

அச்சிறுமியும் பொய் கண்ணீர் வடித்தபடி ஆடுகின்றாள் !

சிறு இரும்புவளையமொன்றில் தலை வழியே போட்டு கால்வழியே தன்னையும்
தன் சிறுமியையும் ஒன்றாய்
நுழைத்து வெளியில்
எடுகின்றாள் சிறுக சிறுக ! இறுக இறுக !
இருவரும் வளையத்தை விட்டு மீண்டனர் !

கண்சுருக்கி பார்க்கும் கண்கள்
விடும் பெருமூச்சு !


இரும்பு வளையத்தில் இருந்து அவள் விடுபட்டு விட்டாள் காரணம்
வறுமையால் அவள் மெலிந்துஇருகின்றாள் !

ஏழ்மை வளையத்தில் இருந்து வெளிவரமுடியவில்லை காரணம்
இவளால் வறுமை பெருத்து இருக்கின்றது !

தான் பெற்று எடுத்த சிறு சேயின் காலை
பிடித்து உலுக்கி பிச்சை கேட்கின்றாள் !

குழந்தையின் அழுகுரல் பொறுக்காத

இதயங்கள் தாளம் போட்ட தட்டில்

அடிக்கின்றது சில்லறை மேளம் !

வினோத பிச்சை என்ற பேரில் பிஞ்சு கைகளை

பொம்மை கைகளாய் முறுக்குகின்றால் !

அதியசத்துடன் பார்க்கும் முட்டாள் கண்கள் !

பள்ளி செல்ல கொஞ்ச வேண்டிய தாய்

பிச்சை கேட்க கொஞ்சுகின்றால்
தான் தன் தாயிடம்
வளர்ததைபோல்
இதுதான்

பரம்பரை வியாதியோ !

எழுதியவர் : குல்ஷன் (3-Sep-12, 10:44 pm)
பார்வை : 154

மேலே