வண்ணத்துபூச்சியின் பெருந்தன்மை.

நீ வண்ணமயமாய்ப் பறப்பதற்கு
கூடுடைக்கும் முன்பே உன்னை
வெந்நீரால் கொலை செய்துவிட்டு
உன் உமிழ்நீராலான இழைகளை
சேர்த்து ஊடுருவச்செய்து உருவாக்கி
சேலையாய் அணிந்து செல்கின்றனர்...

நீயோ இறந்த பின்பும் பெண்களை
மெருகூட்ட வண்ணமயமாய்
உலாவுகிறாய் சேலையாக ....

உன் பெருந்தன்மைக்கு
ஈடுஇணை தேடுகிறேன்

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம். (8-Sep-12, 9:30 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 193

மேலே