paraparapai

புத்தம் புது காலை சூரியன் தன் பொன்னிறக் கதிர்களை பரப்பும் வேலை அது,
பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்த காலை நேரம் மரங்களின் மீதிருந்த குயில்களின் கானம்
காற்றில் மிதந்து வந்து என் செவியைத் தொட விழ்த்து எழுந்தேன் .
சுவரில் இருந்த கடிகாரம் 7 முறை மணி
அடித்து ஓய்ந்ததும் அவசர அவசரமாய் பல் துலக்கி, குளித்து பரபரப்பாய் பள்ளி சீருடை அணிந்து, தலைவாரி இரட்டை பின்னலிட்டு
அவசரமாய் இரண்டு இட்லிகளை விழுங்கிட அது விக்கிட தண்ணீரை தேடி ஓடினேன் சமையல்அறைக்கு ...
வெளியே பள்ளிப் பேருந்தின் சத்தம் கேட்டு
புத்தகப் பையைத் தேட அதோ!...
ஒரு மூலையில் புத்தகங்களற்ற வெற்றுப்பையாய்
என்னைப் பார்த்து சிரித்து ஏதோ உணர்த்தியது
அப்போதுதான் உணர்ந்தேன்
நான் பள்ளிப்பருவத்தை முடித்து விட்டேன் என்று ...

எழுதியவர் : தேவி பிரியா.ர (9-Sep-12, 4:55 pm)
பார்வை : 122

மேலே