என் பிறப்பே!

துள்ளி விளையாடி தோள்மீது சிந்தும்
கிள்ளியும் கேலி செய்தும் நீ
நல்ல சிரிப்பும் நகையாடிய பொழுதில்
கள்ள சிரிப்பும் கும்மாளமும் பிடித்தது

மெல்ல அருகில் வந்து மெதுவாய்
சொல்லிய வார்த்தைக்கு நூறு பதில்
அள்ள அள்ள குறையாத அன்புக்கு
தெள்ள தெளிவாய் பதில் சொன்னேன்

நல்லதும் கெட்டதும் நாட்டில் நடப்பதும்
உள்ளது உள்ளபடியே உரைத்தேன் சொன்னேன்
செல்ல கிளியே செந்தமிழ் மொழியே
உள்ளம் இனிக்குது உன்னால் மகிழ்ந்தது

சொன்னதும் செய்தாய் சிரிப்போடு இருந்தாய்
சொர்கமை இருந்தது சொந்தமாய் முத்தம்
கன்ன குழிவிழ கண்சிமிட்டி சிரிதாயே
கண்ணினின்மொழி பேசி மகிழ்ந்தாயே

என்னை சீன்டியதும்இடைமறித்து
உன்னை திட்டியதாய் உள்வாங்கி
கண்ணை கசக்கி கடும் கோபமுடன்
அன்னையையும் அடித்தாய் அழுதாயே

அத்தனையும் நடந்தது அமுதுன்னும்
பித்தில்லா பிள்ளை பருவத்தில்
சித்தனாக பித்தனாக நானிருந்தேன்
சிறிதும் கொபமில்லாது மகிழ்ந்தேன்

முப்பது மாதம் தான் முடிந்தது
முன்பருவ பள்ளியில் சேர்த்தபோது
முடியாது மறுத்து அழுதாய் பின்
முகமலர்ந்து தொடங்கினாய் படிப்பை

அன்றே உரைத்தது அவ்வளவுதான்
அன்பால் அடித அடியும் மறந்தது
அன்பால் கடித்தது கட்டி பிடித்தது
அன்பாய் சிரித்தது அருகில் அமர்ந்தது

இன்றோ படிக்கிறாய் எனக்கு சொல்கிறாய்
பண்பாடும் பற்றுதலும் பாடத்தில் உள்ளதென
பெண்பாலாய் இருப்பதால் தள்ளியே நிற்கிறாய்
அன்பன வார்த்தைகள் அளவோடு பேசுகிறாய்

என்போல உயர்ந்து சிந்திக்கிறாய் சிரிக்கிறாய்
பண்போல காத்த உன்னை நினைத்து
உன்போன்ற உத்தமியை ஊர் போற்ற
கல்யாணம் முடித்து கண்போல காத்திடுவேன்

இராம.கண்ணதாசன்
சென்னை

எழுதியவர் : இராம.கண்ணதாசன் (11-Sep-12, 7:37 am)
சேர்த்தது : கண்ணதாசன்
பார்வை : 153

மேலே