பவர் ஸ்டாருடன் சிம்பு!

சந்தானம், பவர் ஸ்டார் இணைந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தானம் , ராம நாராயணன் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறார்கள்.

இப்படம் தொடங்கும் போது, "முன்னணி மூன்றெழுத்து நடிகர் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்" என்று தெரிவித்து இருந்தார்கள்.

சிம்பு தான் அந்த மூன்றெழுத்து நடிகர் என்று தெரியவந்துள்ளது.

சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சிம்பு. தற்போது சந்தானம் தயாரிப்பாளராக அறிமுகமாவதால் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக சிம்பு நடிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

'கொசுறு' கபாலி : " பட ரிலீஸ் அப்ப 'பவர் ஸ்டார்' போஸ்டர் பின்னியெடுக்கும் பாருங்க! "

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (17-Sep-12, 12:05 pm)
சேர்த்தது : நெய்வேலி ஆனந்த்
பார்வை : 437

மேலே