வந்திடு அருள் தந்திடு
கொழு கொழு கொழுக்கட்டை
படைத்து வைத்த மோதகம்
விரும்பி நீ ஏற்பாயே
வெற்றி தரும் விநாயகனே
சித்தி விநாயகனே
சங்கடங்கள் போக்கிடுவாய்
பக்தியோடு அழைத்திட்டால்
வந்தவினைகள் நீக்கிடுவாய்
கந்தனுக்கு மூத்தவனே
உந்தனை நினைத்து
கலங்கமுற்று நின்றுவிட்டால்
கவலைகள் கரைத்திடுவாயே
கம கமக்கும் பலகாரங்கள்
உன்னை எதிர்பார்த்திடும்
பூஜை முடிந்த பின்னரே
எங்களுக்கும் கிடைத்திடும்
எங்களுக்கொரு வாய்ப்பு
உனக்கு விருந்து படைத்திட
அன்போடு அழைக்கின்றோம்
விநாயகர் சதுர்த்தியிலே !!!