ஈழத்துப்பெண்

பாரதி கண்ட கனவு மங்கையல்ல - எம்
தலைவன் உருவாக்கிய நிதர்சனம்....!
புதிய வரலாற்றின் வாசல்கள் தோறும்
சாதனை கொண்டு பெயரெழுதியவள்...!
சீரும் வேங்கைகளும் - அவள் பார்வையில்
சிதறி ஓடும் - அவள்
ஆணென்றும் பெண்ணென்றும்
பிரிவினைக்காட்டி வளர்ப்பதில்லை
வரும் தலைமுறை - அவள்
முன்னுரைப்படித்து முன்னேரிச்செல்ல....
முகத்திரையை கிழித்தெறிந்த்து
முட்டுக்கட்டையிடுவாள் பெண்ணடிமை தனத்திற்கு.

விடுதலை எனும் விடுகதைக்கு
விடைதேடி .....!!!
வாகை திலகம் நெற்றியிலிட்டு - வீர
வாளுடன் வருகின்றாள்...!
தாய்பாலூட்டும் போதே
தமிழர் வீரத்தையும் விடுதலையையும் - தரணியில்
தலைத்தோங்க புகட்டுகிறாள் .
தாலாட்டும் போதே தியாகத்திற்கு
தயாராகிறாள்...!

காவியப்பெண்ணல்ல - இவள்
காரணப்பெண்
விடுதலையெனும் ஆகுதியிலே
தீக்குளிக்கப்போபவள்.
பெண்ணியம் என்று பிதற்றுபவர்களே !
மங்கையென்பவள் மல்லிகைப்பூவல்ல - அவள்
மனங்கொண்டாள் மாடமாளிகைகளும்
மனமேடு தான்.

திரும்பி பாரடா தமிழா !
எம் ஈழத்துப்பெண்ணை.
இவள் பட்ட மரமல்ல
பாரதியின் புரட்சிப்பெண்.
நள்ளிரவில் இடுக்காடு வழியால்
நங்கையவள் சலனமின்றி தன்னந்தனியாகவும் ,
தாய்த்திரு நாட்டிற்குள் பூந்தென்றல் வீச
எல்லை தன்னில் புயலாய் நிற்கின்றாள் ...!

நித்திரை கலைந்து
நித்தமும் அவள் கேட்கும்
மங்கள நாதம் யுத்தமென்னும் கீதமே !
மண்ணும் விண்ணும்
தீயும் காற்றும்
புனலும் கனலும்
போற்றிடும்
தியாகத்தின் வீரச்சின்னம்
என் ஈழத்துப்பெண்

எழுதியவர் : அ.ஸ்வின்டன் (23-Sep-12, 8:42 pm)
பார்வை : 194

மேலே