!!!====(((மனிதம்)))====!!!

இதழெனும் கதவினை சாத்தி
இமைகளை இழுத்து பூட்டி
இதயத்தை இருட்டில் நிறுத்தி
எதை தேடுகிறாய் மனிதனே...
எதை தேடுகிறாய்...?
மனதை திரையிட்டு மறைத்து
உணர்வை தீயிட்டு எரித்து
கனவை சிறையிட்டு அடைத்து
எதை தேடுகிறாய் மனிதனே...
எதை தேடுகிறாய்...?
கால்களை கட்டி போட்டு
பயணத்தை பிச்சு போட்டு
கடமையை சுட்டு போட்டு
எதை தேடுகிறாய் மனிதனே...
எதை தேடுகிறாய்...?
உடம்பினில் சாயம் பூசி
உறவினில் சூது கலந்து
ரத்தத்தில் வர்ணம் கொண்டு
எதை தேடுகிறாய் மனிதனே...
எதை தேடுகிறாய்...?
மிச்சம் எங்கயாவது - நீ
எச்சமாகவாவது
எஞ்சி இருக்கிறாயா...
என்று தேடுகிறாயா...???
குறிப்பு;
சாயம் - கலர்
வர்ணம் - சாதி