முயலாதிருந்தால் எதிரி கூட சோம்பேரியாவன்
முடிந்தால் தகர்த்து தான் பார்
என் நம்பிக்கை மதில் மேல்
நீயும் ஒட்டிக் கொள்வாய்.
தகர்ந்தால் தாண்டி தான் பார்
என் ஆசை கோட்டை மேல்
நீயும் ஆசை புரிவாய்.
தாண்டினால் மிதித்து தான் பார்
என் வாசற் கோலத்தின்
அழகில் நீயும் நெளிவாய்.
மிதித்தால் அழித்து தான் பார்
என் வண்ண கம்பளத்தை
நீயும் அணிவாய்.
அழித்தால் மறந்து தான் பார்
உன் எதிரியாய் ஆனதால்
நீயும் பெருமிதம் கொள்வாய்.