இடை- நாட்களில்...!

வருகையின் பின்
வருகை தர
இயலவில்லை,
இடைவெளி கொண்டேன்
இயலாத நிலையால்
இன்னலற்ற சில
இடையுறுகளால் - இணை
இல்லாமல் சிக்கிக்கொண்டேன்,
ஈடற்ற பணிகளில்
இருந்த என்னால்
இயலவில்லை வரைவதற்கு
இந்த இடைவெளியில் !...

இளகிய மெழுகுவர்த்தியாய்
இருட்டற்ற ஒளியாய்
இருந்தேனே களியாய்
இவ்வறேன்றெண்ணி
இயக்க முடியவில்லை
இக் கவியால்..!,

இருட்டறையில்
இருந்த என் மனக் கனவுகளும்,
இயலவில்லை பேசவும் - என்
இனிய குடும்பத்தினருடன்,
இங்கெங்குஎன்று
இடமாற்றம் - என்
இதயத்திலோ தடுமாற்றம்..!

இயந்திர உலகம்
இயங்கும்
இந்நிலையில்
இவன் - என்னென்று
இரைப்பானே,
இறை நடத்தியதென்னவென்று
இவ்
இடை - நாட்களில்...!

இடைவெளியில்

இக் கவி - தா. மோ. கெளதம்...!

எழுதியவர் : தாடான் மோகன் கெளதம் (26-Sep-12, 1:05 am)
சேர்த்தது : Kavi Gowtham
பார்வை : 171

மேலே