பிரிவு

உன்னை விட்டுப் பிரிந்ததும்
கடல் நீரில் கலந்த கண்ணீராய் போனேன்!
நெடுநேர மழையில் சிக்கிய காகிதம் போல்
நிலை அற்றுப் போனேன்!
மலை உச்சியில் இருந்து விழுந்த சிறு எறும்பைப்
போல தொலைந்து போனேன்!
தனிமைக் கடலில் மூழ்கிய எனக்கு மீண்டு வர
வழியே தெரியவில்லை!
பின்புற மலையில் உள்ள மரங்களை போல
அதிஷ்டம் அற்றவரனாக மாறினேன் !
வானம் தூரம் இல்லை என்ற நான் தொடு
வானத்திற்கு நண்பனாக மாறினேன்!

பாலின் மரணம் பசுவின் பிரிவில்!


மழையின் மரணம் மேகத்தின் பிரிவில்!


என் மரணம் உந்தன் பிரிவில்!

-வேல்முருகானந்தன் .சி

எழுதியவர் : வேல்முருகானந்தன் .சி (26-Sep-12, 6:19 pm)
Tanglish : pirivu
பார்வை : 253

மேலே