கடன்பட்டவன் ஓய்ந்து சாகிறான் (வாழ்க்கையின் இறுதிவரை தீராதகணக்கு)

கடைவாய்ச்சோறும்
தொண்டையில்
கரிக்கும்!...
மலவாய்ச்சொற்கள்
காலைப்பொழுதில்
வாசலில்
மலம் கழிக்கும்!
மனைவி
வேசி யாவாள்
கை நீட்டியவ னிடத்தில்
கற்பமுறுவாள்!
ஒரு நாள் ளிரவு
என்னுடன்
ஓய்வெடுக்க வா
வென்ற ழைப்பான்!
உனக்கும் அவளுக்கும்
உள்ள
அந்தரங்கம்
மூன்றாம் அவனின்
வாசலுக்குள் நுழையும்!
தேவடியாளாய்
தெருக்கல்லுக்கும்
தெரிவாள்!...
கெட்டுப்போனவள்
என்று
ஊர் நாட்டாமை
வைப்பாட்டியாய்
வைத்துக்கொள்ள
நினைப்பான்!
மகன்
விருந்தாளிக்கு
பிறப்பான்!..
மகளின் பருவத்தை
தெருநாய்கள்
மோப்பம் பிடிக்கும்!
விபச்சார விடுதிக்குள்
உன் குடிசைஓட்டை
தெரியும்!
பணம் கேட்டு
சொந்தக்கார ரிடம்
போனால்
அழுக்கு மூட்டை
முடிச்சுகள் வந்து
வாசலில் விழும்!
விஷம் குடிக்க போவாய்
மனைவி
விதவை யாவாள்
உன் கதவைச் சுற்றி
ஈனக்கரையான்கள்
மொய்க்கும்!
குடிசை யரித்து
குட்டிச்சுவராகும்!
மகளின் கணவன்
நல்லவனானால்
உன்
மகளுக்கு தாலி
கொடுப்பான்
கெட்டவனானால்
விருந்தாளி யென்று
கூலி கொடுப்பான்!..
உனக்கு கொல்லி வைக்காமலேயே
தனக்கே
கொல்லி வைப்பான்
உன் மகன்!
அள்ளி வைத்து
தின்ன
அரைச்சோறும்
திண்ணையில்
அறுபட்டுக்கிடக்கும்!
பார்த்து பார்த்து
வளர்த்த
உன் மனைவிமக்கள்
வீட்டு வாசலில்
விரைத்து
செத்துக்கிடக்கும்!
வாய்க்கரிசிக்குக் கூட
உலக்கரிசி இருக்காது
அதையும்
உன் வளர்ப்பு
கோழிகள்
வாயில்
அடகு வைத்து விடும்
உன்
வீட்டுப்பத்திரமும்
அடகுக்கடையில்
பத்திரமாய்
இருக்கிறது!
வீட்டுப்பாத்திரத்தை
விற்கலாம் என்றால்
அதுவும்
ஓட்டைஒடசலாய்
கிடக்கிறது!...
பட்டா இல்லாத
பரதேசியாய் வீடும்
கிடக்கிறது!...
உண்டியலில்
சாமிகாசு இருக்கிறது
அதை யெடுத்தால்
தெய்வக்குத்தமாய்
இருக்கிறது!
என்ன செய்வார்கள்
உன்
அண்ணன்காரனும்
தம்பிகாரனும்...
சாணத்தை உருட்டி
ஒற்றை ரூபாய்
அச்சுப்பதித்து
நெற்றியில்
உன் தரித்திரம்
குத்திக்காட்டுவார்கள்!
உடல்கள்
அம்மணமாய்
கிடக்கிறதென்று
உன் வீட்டு
கொடிக்கயிறில்
அழுக்கு வேட்டியும்
கிழிந்த கண்டாங்கியும்
கண்ணீர்
விட்டுகொண்டிருக்கும்!
உன் காட்டு
மூங்கிலும்
கடனில் கிடக்கும்!
அதை வெட்டவும்
தடுப்பார்கள்!
பாடைகட்டவும்
தடுப்பார்கள்
கடன்காரர்கள்!...
நீயோ
விஷம் குடித்து
பொசுக்கென்று
செத்துப்போவாய்!
மனைவி மக்களோ
செத்தும்
சீரழிவார்கள்!
உன்
சொந்தக்காரர்கள்
உனக்கு
கடமைப்படிருந்தால்
செலவழித்து
துக்கிப்போடுவார்கள்!
நீ
சொந்தக்காரனிடமும்
கடன்
பட்டிருந்தால
போலிப்பாடை கட்டி
தூக்கி
யெறிவார்கள்!
அப்போது
ஒருவன,
என்
பணத்தையெல்லாம்
பாவி
பறித்து போய் விட்டான்
என்று சொல்லி
உன் குடும்பத்தை
தலைமொழுகிவிட்டு
வருவான்...

எழுதியவர் : ருத்ரா-Mr.dreams (27-Sep-12, 2:11 pm)
சேர்த்தது : ருத்ரா நாகன்
பார்வை : 198

மேலே