அந்நியதேசம் செல்கிறேன்

நான் செதுக்கிய
கருவறை சிற்பமே
உன்னை காண முடியாமல்
அழைத்துச் செல்லுமோ
அந்நிய தேசம்


சமுதாய சிக்கலில் பொருளாதாரம் ஈட்ட
பிஞ்சு மலர உனக்காக
அந்நிய தேசம் செல்கிறேன்

உன் அன்னையின் மறுஜென்மத்தில்
உன் மேனி பூமீதொடும் நேரத்தில்
அழைத்து செல்லுமோ
அந்நிய தேசம்

பணம் என்ற வார்த்தையில்
மனதை இழந்து
அந்நிய தேசம் செல்கிறேன்

நீ மகளா????.... மகனா???...
கண்ணீரால் கதை எழுதிகிறேன்
என் டைரியில்!


திருப்பி வரும்வேளையில்
என்னை நினைவிருக்குமா??????......
நான்தான் உன் அப்பா என்று ........

கேள்வி எழும் வினாக்களுக்கு
விடை தெரியாமல்......

எழுதியவர் : தேன்மொழி (3-Oct-12, 8:42 am)
பார்வை : 141

மேலே