வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை

நாலு மணியானதும்
நல்விளக்கு ஏற்ற வேண்டும்
நாழி கழிந்ததும்
நடக்க வேண்டும் வீட்டுவேலை

காலை கடன் முடித்து
காப்பி குடிக்கவேண்டும்
காய்கறியும் நறுக்கணும்
கணவரையும் அனுப்பனும்

பால்வாங்க சொல்லனும்
பாத யாத்திரை செல்லனும்
குக்கரை வைத்துவிட்டு
குழம்பு வைத்து முடிக்கனும்

ஐந்து மணியானதும்
அவசரமாய் குளிக்கனும்
அதன்பின் பூஜையை
அன்புறுக செய்யனும்

செய்தி தாளை அவசரமாய்
சீக்கிரமே படிக்கனும்
சிறுவர்களை எழுப்பிவிட்டு
பொறுமையாய் சொல்லனும்

பல்துலக்கியதும் அவர்களை
பாக்கிஎல்லாம் செய்யனும்
காலை உணவை நாளும்
கஷ்டத்துடன் ஊட்டனும்

ஏழு மணிக்கெல்லாம்
எழுந்து செல்ல சொல்லனும்
அதற்குள் அவருடன்
ஆலோசனையும் செய்யனும்

கிடைத்த நேரத்தில்
துணி துவைத்து வைக்கனும்
வீட்டையும் கூட்டி
வீட்டுக்கு வெளியே கொட்டனும்

எட்டு மணிக்குள்
எல்லா வேலையும் முடிக்கனும்
ஒன்பது மணிக்குபின்
ஓழிச்சலின்றி செல்லனும்

பத்து மணிக்குள்
பதிவுஏட்டில் கையெழுத்து போடனும்
பார்த்தவுடன் எல்லோருக்கும்
பதிலுக்கு சலாம் அடிக்கனும்

அப்படா உச் என்று
அப்புறம்தான் உட்காரனும்
அதற்குள் அடுத்த மேசை
அம்மணியை நலம் கேட்கனும்

அருகருகே விஷயம் பேசி
அடுத்தவரோடு சிரிக்கனும்
அந்தநாள் வேலையை
அன்றாடம் முடிக்கனும்

ஆறு மணிக்குபின்
அவசரமாய் வீட்டுக்கு செல்லனும்
அந்தநாள் வீட்டுபாடம்
அன்னைக்கே செய்ய சொல்லனும்

வீட்டருகே வசிபோரிடம்
விலைவாசி கேட்கனும்
வீதியில் நடப்பதையும்
விவரமாக தெரிஞ்சிகனும்

எழு மணிக்குப்பின்
ஏதாவது தொடர்கதை பார்க்கனும்
ஏழுலக செய்திகளை
எல்லாமும் தெரிஞ்சிகோனும்

துணிமனியும்வேண்டும்
தங்கமும் வேண்டுமென்றால்
துக்கத்துடன் வருவார்
துயரமென்று சென்றிடுவார்

பிள்ளைகளுக்கு சோறூட்டி
படுக்கைக்கு தூங்க அனுப்பனும்
பாத்திரம் எல்லாம் கழுவி
பத்திரமாய் அடுக்கி வைக்கனும்

பத்து மணிக்குப்பின்
பசியாறி தூங்க செல்லனும்
பாவம் அவரையும் பார்க்கனும்
செல்ல சினுன்களோடு சிரிக்கனும்

தொல்லை தருவார் அதற்காக
செல்லமாக மறுத்தும் அவர்
தொலையட்டும் சரியென்றால்
சேட்டையை தொடங்கி முடிப்பார்

இப்படிதான் வாழ்கை
இறுக்கமாய் செல்கிறது
வேலைக்கு செல்ல மறுத்தால்
வேதனைதான் எனக்கு மிஞ்சும்

சொல்ல இயலவில்லை
சோகத்தை அடக்க முடியவில்லை
மெல்ல புரிய வச்சி
மென்மையாகஅவரிடம் சொல்லனும்

எழுதியவர் : சேலம் .ராம.கண்ணதாசன் (3-Oct-12, 8:47 pm)
பார்வை : 615

மேலே