விதவை மறு மணம்

பூவெல்லாம் பூத்திருக்கு

புது நெல்லும் விளைஞ்சிருக்கு

காதோரம் வண்டு வந்து

கவலையோடு சொல்லுது

கோழி குஞ்சுகளோடு

குப்பையை கிளறி சாப்பிடுது

பசுவும் கன்றும்

பசியாறி மகிழ்ந்திருக்கு

ருசியானஉணவும்

பசிதீர கிடக்குது

விதி மட்டும்

என்னை ஏன் ?

விதவை ....

என்று சொல்லுது ?

மல்லிகை முல்லை

மனமிங்கே வீசுது

தினமிங்கே பார்த்தாலும்

தொட்டு பூ பறித்தாலும்

மனமதனை முகர்ந்தாலும்

மல்லிகையை பிடித்தாலும்

குனமேனக்கு இருந்தும்

குறைஎன்ன தெரியலியே

அவனை பார்கிறேன்

அழகை ரசிக்கிறேன்

நாவெல்லாம் இனிக்க

நாளும் பேசினாலும்

நட்புடன் என்னோடு

நாளும் இருந்தாலும்

என் மனதை அறிந்தாலும்

என்னை அடையலியே

எனக்கும் இன்பம் வேண்டும்

என்னோடு பகிர வேண்டும்

விதவையின் விதி என்ற

வெட்டி வேஷம்

கணக்காய் சொன்ன

கயவரை கொல்ல வேண்டும்

இளமையுள்ள இளைஞனே

இவர்களையும் பாருங்கள்

எழிலோங்க செய்யுங்கள்

இழி நிலையை மாற்றுங்கள்

எழுதியவர் : ராம.கண்ணதாசன் (6-Oct-12, 1:19 pm)
பார்வை : 261

மேலே