உறவுகள்...

அம்மா...,
உன் கவலைகளுக்கு..
நான் பிம்பம்
கொடுக்கிறேன்....
என் கண்ணீரில்...
சுமக்கிறேன் காயங்களை
நானும்...,
உன்னை போல...
பண நோட்டிற்கு
இருக்கும் மதிப்பு
உறவுகளுக்கு இல்லை,
கட்டுக்கட்டாய்
அவர்களிடம் பணம்...
ஏனோ, குப்பையில்
கிடக்கிறோம்...
உறவுகளால் கைவிடப்பட்டு...
பணம் நிலைப்பதில்லை,
உறவுகளையும் நிலைக்க விடுவதில்லை....
நிலைக்க விரும்புகிறேன்....
உன் உறவின் நிழலில்....,
என்றும் உன் பிள்ளையாக...