வெளியுறவுத் துறை அமைச்சர் கொந்தளித்துள்ளார்..? எவன் வீட்டில் எழவு விழுந்தால் என்ன..? என்று இருக்கிறார்களா..! தமிழக அமைச்சர்கள்..? ஈழதேசம் செய்தி..!

தமிழ் நாட்டில் இருந்து வெற்றி பெற்ற ஏராளமான எம்.பி.கள், டெல்லியில் முகாம் போட்டு, பல நல்லது கெட்டதுகளை செய்த வண்ணம் உள்ளனர். இதில் பல மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து வேறு போய் உள்ளார்கள். நிதி அமைச்சர் தொடங்கி பல்வேறு அமைச்சர்கள் பதவிகளை அனுபவித்துக் கொண்டு, காவிரி நீரா..? ஒரு இரண்டு கேன்களை கொண்டு வந்து போடுங்கையா..வீட்டில் ..! என்ற நினைப்பில் உள்ளார்கள். அல்லது காவிரி நீர் பிரச்சனை..? அதுதான் எப்பவுமே உள்ளது தானே..என்றும் இருக்கலாம்..யார் கண்டது.

இந்த நிலையில் இன்று வைக்கோ அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சருக்கும் சூடு, சொரணை இல்லை என்று ஆவேசம் அடைந்துள்ளார். மேலும் கூறுகையில், இந்தியாவின் வெளிவிவகாத் துறை அமைச்சராக இருக்கின்ற கர்நாடகத்தை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள், தமிழ் நாட்டிற்கு காவிரி தண்ணீர் தரக் கூடாது என்று ஆணவத்தோடு கன்னட வெறியராக மாறி, இந்திய பிரதமர் மண் மோகன் சிங் அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்த படியே ஒரு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்...!

( பேக்ஸ், தந்தி, இ - மெயில் என்றெல்லாம் வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கையில், அது என்ன கடிதம் எழுதுவது..! இது என்னங்கையா..புது விதமான டெக்னாலஜி..? இதில் வேறு ஏதுவும் உள்குத்து இருக்குமோ ..? இல்லையென்றால் இந்த நடைமுறையை கடைபிடிப்பார்களா என்ன..? )

இந்த நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் கடிதத்திற்கு, கண்டனம் தெரிவித்து வெளிப்படையாக பிரதமருக்கு கடிதம் எழுதுகின்ற மான உணர்ச்சியோ, தமிழக நலனில் அக்கறையோ, மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கும் இல்லை. சூடும் சொரணையும் இல்லை என்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார் வைக்கோ அவர்கள்.

கர்நாடாக மாநிலத்தில் உள்ள மத்திய அமைச்சர் காவிரி நீர் குறித்து எந்த கருத்தும் சொல்லவில்லை என்றால், அவர்கள் வீடுகள் கர்நாடகத்தில் இருக்காது அது மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் கர்நாடக மாநிலத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே தான் பதறி அடித்துக் கொண்டு கடிதம் என்ன..காவடியே எடுப்பார்கள்...! குடும்பம் முக்கியமா..?. அரசியல் முக்கியமா..?

தமிழ் நாட்டில் அந்த அவசியம் எல்லாம் கிடையாது. தமிழர்களுக்கு எதிராக யாராவது ஒரு கருத்து சொன்னால், அவர் பின்னாளில் எதாவது ஒரு கட்சியின் வி.ஐ.பி. யாக மாறிவிடுவார். ( உ.ம்.) திருமதி குஷ்பூ அவர்கள். ! என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-Oct-12, 8:54 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 103

சிறந்த கட்டுரைகள்

மேலே