இலங்கை ராணுவ பயிற்சிக்கு தடை விதிக்க முடியாது - இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..! அரசின் முடிவு, அரசின் கொள்கை, பாதுகாப்பு, ராணுவ ரகசியம் என்று தட்டிக்கழிக்கிறதோ நீதிமன்றங்கள்..?!

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலும் இந்தியாவும் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட முடியாது என்று கூறி தடையெல்லாம் விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ பயிற்சி மய்யங்களில் பல்வேறு இடங்களில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது, இலங்கை ராணுவ பயிற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தமிழ் நாட்டில் ரகசியமாகவும், மற்ற இந்திய மாநிலங்களில் வெளிப்படையாகவும் பயிற்சிக்கு மேல் பயிற்சி என்று அளித்துக் கொண்டு இருக்கிறது இந்திய அரசு.

கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சிகள் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றே.கூறிவருகின்றன. இதற்கு இந்திய அரசு நேரடியாக பதில் அளிக்காமல், இலங்கை அரசை விட்டு பதில் சொல்லுகிறதோ.. என்று ஐயம் கொள்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பசில் ராஜபக்சே இந்தியாவில் ராணுவ பயிற்சி என்பது எல்லா வகையிலும் சிறப்பானது என்கிறார். இலங்கை ராணுவ தளபதி ஜெகத் சூரியா அவர்களோ, தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் எதிர்ப்பதால் எந்த விளைவும் ஏற்பட்டுவிடாது என்கிறார். ஒரு சிறு மாநிலம் எதிர்ப்பதால் எங்களுக்கு ஒன்றும் நட்டம் இல்லை என்கிறார். எவர் எதிர்ப்பினும் இந்தியாவில் பயிற்சி தொடரும், இனி இலங்கை ராணுவ பயிற்சி பற்றிய விபரங்களை நாங்களே வெளியிடுகிறோம்...என்ன செயவ்வீர்கள்..? என்று மிரட்டியே கூறி இருக்கிறார்.

தற்பொழுது இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அது வந்து அரசின் வெளியுறவுக் கொள்கை என்று அறிவித்து விட்டது. அரசின் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, உள்துறை கொள்கை என்று ஏதாவது ஒரு வியாக்கியானம் செய்வதே தனது வேலை என்று கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறது நீதித்துறை. அப்படியென்றால் கொலை, பாலியல் வல்லுறவு, அடிதடி, முன்ஜாமீன் போன்றவைகள் மட்டுமே இனி நீதிமன்றங்களில் வழக்குகளாக ஏற்றுக் கொள்ளப்படும் ,விசாரிக்கப்படும் என்ற நடைமுறையை வைத்திருக்கிறதோ அணைத்து நீதிமன்றங்களும்..? என்று ஐயம் கொள்கிறார்கள் பொது மக்கள்..! என்று கருதலாமா..?

எழுதியவர் : மீள்சிறகு (8-Oct-12, 1:52 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 145

மேலே