நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...(மனிதன் தொலைந்து போகிறானா?..தொலைத்தவனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி)

நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...(மனிதன் தொலைந்து போகிறானா?..தொலைத்தவனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி)

நித்தமும் தோளில் ஏர் கலப்பை சுமந்து உலகுக்கே சோறு போட்ட உழவன் எங்கே போனான்....
குடும்ப பாரம்பரியத்தின் எடுத்து காட்டாய் விளங்கியவன் இன்று சமுதாய சீரழிவின் முதல் வேராய் மாறி போனான்....
எதிர் கால சந்ததியின் பாதைகளை சரியாக செப்பனிட தவறிய பெற்றோராக மாறி போனான் ....
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உலை வைத்து வயிற்றை காப்பாற்றி தவறுகளை தட்டி கேட்கும் ஞானமற்று மானமற்று போனான் ....
படித்தவனே இண்டர் நெட் போதைக்குள் இருளை வெளிச்சத்தில் நீலமாய் பார்த்து போனான்...
போதையின் பாதையில் டாஸ்மாக்கின் விற்பனையை உச்சமாக்க விளைகிறான்...
புகைக்கு பகையாக வேண்டிய அவன் புகையோடு உறவாடி சுற்று சூழலை கெடுக்கிறான்...
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தவன் இன்று ஊழலிலும் ,வறுமையிலும் உழன்று போகிறான் ..
தொலைத்ததும் தொலைந்த்துமான அவன் கணக்கில் தொலைந்தே போய் இருக்கிறான்...
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வந்தால் கூட ஏற்று கொள்வோம் ...பாதை தொலைத்த என் சகோதரனை மீட்டு கொண்டு வர....
அவனது அடுத்த இலக்குகள் அழகானதாக மாறட்டும் ...
அவன் பாதைகள் அழுத்தமாக பதியட்டும் இந்த பூமியில்...
அவனின் வெற்றிகள் கல் வெட்டுக்களாய் மாறட்டும் ...
என் அன்பு சகோதரனே...
நீ உன்னை தொலைத்து விடாதே...
நீ நம்பிக்கையின் ஆணி வேர்...
உன் ஜீவனின் உயிர் மூச்சு...
பாலைவன மனசையும் நேசிக்க கற்றுகொள்...
சமயோசித புத்தியால் சாதிக்க கற்று கொள்...
தன்னம்பிக்கை விதைகளை உனக்குள்
ஊன்றி விடு ....
உனக்கான விருக்‌ஷம் விளைந்து நிற்கும் ...
தானே முளைத்து உன் இலக்கை எட்டி விடும் ...
”வீழ்வேன் என நினைத்தாயா’ என முழங்கிய பாரதி போல
வீழ்ந்தாலும் அருவி போல் விழுந்து விடு
எழுந்தாலும் சிகரம் போல் எழுந்து விடு ....
நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...

எழுதியவர் : info.ambiga (9-Oct-12, 10:31 am)
பார்வை : 575

மேலே