@@@ பூக்கள் பூக்கும் தருணம் @@@

முழுநீள இரவில்
முடங்கிக் கிடந்த
மொட்டுக்களின்
முனகல் சத்தங்கள்

பனித்துளிக் குளியல்
பரபரப்பாய் முடிந்திட
நடுங்கிக் கொண்டே
நகைத்துக் கொண்டன

விறுவிறுப்பாய்க் கண்ட
சுறுசுறுப்பு காட்சிகளில்
சுவாரசியமாய் சுகந்தம்
சுற்றிக்கொண்டு விட

மெல்லிய இதழ்கள்
மெதுவாய் விரிந்து - என்
அகங்குளிர அற்புதமாய்
முகம் மலர்ந்த விநோதம்

அதுவரை எனக்குள்
அசைந்திடாத உணர்வுகள்
ஆசையாய் தொட்டுவிட
அழகாய்க் கைகள் நீட்டின !!!

எழுதியவர் : புலமியம்பிகா (12-Oct-12, 12:24 am)
பார்வை : 448

மேலே