வாழ்க்கை கவிதை

மௌசு தொட்டுவாழும் வாழ்க்கை

பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே வாழ்க்கை

தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த உறவுகளெல்லாம்

ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை தொலைந்து போகுமோ மொத்தமும்!

புரியாது புலம்புகிறேன் நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து

நிலவு முகம் நான் ரசித்து

கதைகள் பேசி கவலைகள் மறந்த காலம்

இனிதான் வருமா ?

இதயம் நனைத்த இந்த வாழ்வு

இளைய தலைமுறைக்காவது

இனி கிடைக்குமா ?

எழுதியவர் : நவீன் (12-Oct-12, 9:57 am)
சேர்த்தது : நவீன்குமார்
பார்வை : 288

மேலே