நாய் குட்டி செல்லமே

மனிதன் என்னை மதிக்கா விட்டாலும்

மண்டி இட்டு நன்றி சொல்லும்

மனதுள் என்னையே தினம் நோக்கும்-மகிழ்ச்சியாய்

மதித்து வாலாட்டி நன்றி செய்யும்

என்னைப் பார்க்க யார் வந்தாலும்

முன்னே வந்து முறைத்து நிற்கும்

பின்னே சென்று சுற்றி வந்து-முகர்ந்து

பின்னங் கால்களை ஒட்டி நிற்கும்

கருப்பாய் நிறம் கொண்டிருந்தாலும் அது

பொறுப்பாய் தான் இருக்கும் அருமையாக

வெறுப்பாய் நான் திட்டி சொன்னாலும்-நகராது

வெகு அருகில் நின்று கொண்டிருக்கும்

செல்லமாய் சீண்டி அதட்டி விட்டால்

சீக்கிரம் பயந்து குரைத்து விடும்

ஆத்திரம் கொண்டு அடித்து விட்டால்-பிறரை

அடுத்த நொடியே கடித்து விடும்

பொன்னை பொருளை காத்து நிற்கும்

புதிதாய் இருந்தால் நுகர்ந்து செல்லும்

மண்ணையும் மனதில் பதிந்து கொண்டு-நினைவாய்

மண்டியிட்டு உடனே நக்கி திண்ணும்

தூங்கும் போதும் அதன் கவனம்

துணையாய் மட்டும் தான் இருக்கும்

நல்ல நண்பன் தான் என்றாலும்-நல்லதில்லை

உள்ளபடி சொல்வ தென்றால் ஒவ்வாமை

பெற்றோரும் நண்பர்களும் மனைவியும் மகளும்

மற்றோரும் மறந்தாலும் மறவேனே உன்னை

உற்ற நண்பநென பற்றோடி ருப்பேன்-இன்பமாய்

உயிருள்ளவரை உன்னை நன்று காப்பேன்

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நான் மறந்து உண்ட தில்லை

கொண்ட நட்பு கொஞ்சமில்லை -அதை

கோபம் கொண்டு பார்க்காமல் இருந்ததில்லை

எழுதியவர் : சேலம்,இராம,கண்ணதாசன் (12-Oct-12, 10:12 pm)
பார்வை : 115

மேலே