ஓர் இலக்கியப் பார்வை---1 ---கவின் சாரலன்

"ஆனால் "மற்றவர் பார்வையே பார்வை" என்று கூறும் போது மற்றவர்கள் எப்படி பார்கிறார்கள என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது அய்யா !"

-----------அன்பிற்குரிய கவிநண்பர் K S கலை
என்" பார்வைகள் பலவிதம் "கவிதையில் ஆதங்கத்துடன் இவ்வாறு ஒரு கருத்துத் தெரிவித்
திருந்தார்.

நான் அளித்த பதில் பின் வருமாறு :

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு
என்று ஒரு பொன் மொழி உண்டு அதுபோல் கவிஞனுக்கு அவன் எழுதும்
ஒவ்வொரு கவிதையும் அவனுக்கு
அன்யோன்யமானது உன்னதமானது
கவிதை வாசகனின் ரசிகனின் கையில்
போய்விட்டால் அது அவனது பக்கங்கள்
அதைப் பற்றி சொல்வதற்கு கருத்து
தெரிவிப்பதற்கு விமர்சிப்பதற்கு
அவனுக்கு உரிமை இருக்கிறது கவிஞன்
அதை மதிக்கவேண்டும் கருத்து
விரும்பத்தகாத திசையில் செல்லுமானால் பின் அது உங்கள் பக்கம். அது சொற்போராய் இருப்பினும் நாகரிக எல்லைக்குள் இருக்குமானால்
ஆரோக்கியம் . இழிந்து கீழிறங்கிப்
போனால் அது இலக்கிய அருவருப்பு
இலக்கிய சோகம். காகிதத்தில்
அச்சடித்து கடைவீதியில் கூவி அழைக்கத் தேவையில்லை. புத்தகம் வெளியிட்டு புரட்டிப் பார்த்தவர் எத்தனை என்று கணக்கெடுக்கத்
தேவையில்லை பதிவு செய்த நொடியிலே பார்த்தவர் எத்தனை என்ற புள்ளிவிவரம் கிடைத்து விடுகிறது கருத்து வள்ளல்கள் வரிசையாக வந்து கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
கருத்து தெரிவிக்க முடியாதவர்கள்
நட்சத்திர நன்கொடை வழங்குகிறார்கள்
வேறு என்ன வேண்டும் கவிஞனுக்கு ?
எழுதி மகிழுங்கள் . எழுத்தினை
வளர்த்துப் போற்றுங்கள் கவியமுதம்
பெருகிவரும் அழகிய சொர்க்கமன்றோ எழுத்து ! சரிதானே கலை. நன்றி

பின் வரிகளில் எழுத்தினில் கவிதை பதிவு
செய்யும் போது கவிஞனுக்கு கிடைக்கும்
உடனடி FEED BACK னைப் பற்றி சொல்லியிருக்கிறேன் .அனால் இலக்கியப்
பார்வைக்கு இந்த விளக்கம் போது மானதா ?
இல்லை. பின் பார்வையை தொடர்ந்து பாப்போம்.

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Oct-12, 5:49 pm)
பார்வை : 209

மேலே