மாற்றான் .திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மாற்றான் .
நடிப்பு சூர்யா .
இயக்கம் கே .வி .ஆனந்த் .

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

.
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் சூர்யா.இரட்டை வேடத்தில் மிக நன்றாக நடித்துள்ளார் .முழுக்க முழுக்க சூர்யா படம் . இரட்டை வேட படபிடிப்பு தொழில் நுட்பத்தைப் பாராட்டலாம் .இது போன்ற ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்கதையில் உருவான சாரு லதா படம் முந்திக் கொண்டது . படம் மிக நீளமாக் உள்ளது .இடைவேளை வரை படம் நன்றாக உள்ளது .இடைவேளைக்குப் பின் படத்தில் இடைவெளி விழுகின்றது .சூர்யாவின் தந்தையாக நடித்துள்ள வில்லன் நன்றாக நடித்துள்ளார் .அம்மாவாக தாரா நடித்துள்ளார் .

கதாநாயகி காஜல் அகர்வால் ரசிய மொழிபெயர்ப்பாளராகவும் .பாடலுக்கு ஆடவும் வந்து போகிறார் .நடிக்க வாய்ப்பு இல்லை .இதற்கு முன் வந்த இரட்டை வேடங்கள் படங்களில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. தொழில் நுட்பம் மிக நேர்த்தி .

திரைபடத் துறையினர் ரூம் போட்டு யோசிப்பார்கள் என்பதும் உண்மைதான் போலும் .தேவை இல்லாமல் ரசியாவை வம்பிற்கு இழுத்து உள்ளனர் .1992 ஆண்டு நடந்த விளயாட்டுப் போட்டிகளில் வென்றவர்கள் ஊக்க மருந்து உண்டு வென்றார்கள் என்று குண்டு தூக்கிப் போட்டு உள்ளார்கள் .அந்த ஊக்க மருந்து உண்டு வெற்றிப் பெற்ற வீரர்கள் நோய் வந்து வாடுகிறார்கள் .காதில் பூ சுத்தும் கதை .நம் மீது ஆபத்தான கூடங்குளம் அணு உலை திணிக்கும் இழப்பீடு தர மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்ட , ரசியாவிற்கு இது தேவைதான் என்று ஆறுதல் படலாம் .

ஊக்க மறந்து தயாரித்து கொடுத்தது சூர்யாவின் தந்தை.சோதனை செய்தால் தெரியாத அளவிற்கு கண்டுபிடித்து வழங்கி உள்ளார் .பின்னர் அதே பார்முலாவில் பாலில் கலந்து குழந்தைகள் பவுடராக விற்கிறார் .விற்பனையில் முன்னணிக்கு வருகிறார் .

குழந்தைகளுக்கு பக்க விளைவு அபாயம் உள்ளது .புகார் வந்து அராசாங்கம் சோதனை செய்தாலும் ஊக்க மருந்து உள்ளதை கண்டுபிடிக்க முடியவில்லை.பிறகு இந்த விபரம் அறிய சூரியாவும் காஜல் அகர்வாலும் ரசியா பயணிக்கிறார்கள் .பிறகு சூர்யா தந்தைதான் வில்லன் என்பதை உணர்ந்து அங்கு உள்ள கலவை எடுத்து வந்து தந்தை விற்கும் குழந்தைகள் பவுடரில்பக்க விளைவு உள்ள ஊக்க மருந்து உள்ளதை கண்டுபிடிக்கிறார்கள் .தந்தை என்றும் பாராமல் தண்டனை வழங்கிறார் சூர்யா .எலிகள் பொந்தில் தந்தையை இரையாக்குகின்றார்.

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் சூர்யா இருவருக்கும் ஒரே ஒரு இதயம்தான் என்று காதில் பூ சுத்தும் கதை .இருவருக்கு ஒரு இதயம் நம்ப முடியவில்லை .இதுபோன்ற்ட கேள்வி எழுப்பாமல் படம் பார்த்து விட்டு வரலாம் .சூர்யாவின் நடிப்பிற்காக பார்க்கலாம் .இரட்டையார் இருவரில் ஓருவர் மென்மை மற்றவர் வன்மை .ஓருவர் மது அருந்த மாட்டார் .மற்றவர் மது அருந்துவார் .ஒருவருக்கு மற்றவர் திரையரங்கில் காதலியிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி பாடம் நடத்துவது நல்ல நகைச்சுவை .

பாடல்கள் கவிஞர்கள் பா .விஜய் ,நா .முத்துக்குமார் ,தாமரை ,விவேகா என ஆளுக்கு ஒரு பாடல் எழுதி உள்ளனர் .பாடல்கள் நன்று .பின்னணி இசை மிக நன்று .இசை ஹாரிஸ் ஜெயராஜ் .பாராட்டலாம். இயக்குனர் ஆனது மசாலா இயக்குனர் என்பதை மீண்டும் நிருபித்துள்ள படம் .

தந்தை ஆள் வைத்து தாக்கியதில் காயம் அடைந்து, இரட்டையரில் ஒருவருக்கு தலையில் காயம் அடைந்து மூளைச்சாவு நேர்ந்து விடுகிறது .எனவே இருவரையும் அறுவைச் சிகிச்சை செய்து பிரிக்கின்றனர். மூளைச்சாவு அடைந்தவரிடம் இதயம் இருப்பதால் அவர் இதயத்தை மற்றவருக்கு எடுத்து வைத்து விடுகின்றனர் .பல ஆண்டுகளாக ஒட்டி வாழ்ந்த இருவரில் ஓருவர் இறக்கவும் மற்றவர் மனம் வருந்துகிறார் .மிகவும் நெகிழ்ச்சியான காட்சி . சூர்யா நன்றாக நடித்து உள்ளார் பாராட்டுக்கள் .சூர்யா நல்ல நடிகர் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பது நலம் . மாற்றான் தோட்டத்தில் மணம் உள்ளது. நறுமணம் இல்லை .
தமிழ் திரைப்படத் துறையினரிடம் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டில் தமிழ் திரைப்பட விளம்பரத்தில் சுவரொட்டிகளில் ,திரைஅரங்கில் வைக்கும் புகைப்படங்களில் உள்ள பெயர்களை தமிழில் அச்சிடுங்கள். வேறு மாநிலங்களில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள்.

எழுதியவர் : இரா .இரவி (14-Oct-12, 10:06 pm)
பார்வை : 409

சிறந்த கட்டுரைகள்

மேலே