மாலை நேர பேருந்து பயணம்

மாநகரப் பேருந்து, மாலை நேர பயணம்
எதிர் எதிர் இருக்கையில் நீயும் நானும்............
ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாமல்!!!

இருவருமே எழுந்தோம் ஒரே நேரத்தில்
இடம் கொடுப்பதற்காக!!!!?
குழந்தையுடன் நின்ற தாய்க்கு..............................

இடம் கொடுத்தது என்னவோ நான்தான்.........
ஆனால் இடம் பிடித்தவள் நீயே
என் இதயத்தில்.....................

மெல்லியதாய் ஒரு புன்னகை உதிர்த்தாய்,
சிறிதாய் ஒரு ஓரப் பார்வையை வீசினாய்...
காற்றில் கலையும் மேகமாய் காணாமல்
போய்விட்டாய்.........

பின்நாளில் எண்ணற்ற பயணங்கள்
பேருந்தில்.............
எத்தனையோ இட மாற்றங்கள்.......
ஆனால் நீ பிடித்த இடம் மற்றும் யாரும்
நுழைய முடியா வெற்றிடமாய் இன்றும்
என் இதயத்தில் நீளுதடி............................

எழுதியவர் : முகவை கார்த்திக் (15-Oct-12, 5:05 pm)
பார்வை : 476

மேலே