வேண்டாம் இனி..

அருகில் வந்தாய்..
ஆசை வளர்த்தாய்..
இனிய மொழி கூறினாய்..
ஈசனும் நீ என்றாய்..

உனக்கு மட்டுமே நான் என்றாய்..
ஊனுடன் கலந்தாய்..
எட்டி சென்று விட்டாய்..
ஏதுமறியாமல் திகைக்கிறேன்..

ஒன்றும் புரியவில்லை..
ஓசை, ஒளி விளங்கவில்லை..
ஓளடதம் தேடினேன்..
அஃதும் கிடைக்கவில்லை..

கசிந்துருக வைத்தாலும்..
காதல் மட்டும் வேண்டாம் இனி..

எழுதியவர் : RAJ (19-Oct-12, 3:37 am)
Tanglish : ventaam ini
பார்வை : 469

மேலே