குழந்தையும் தெய்வமும் !

"அம்மாவுக்கு
உடம்பு சரியில்லாமல்
போகவேணும் சாமி " என்று
வேண்டிய மகளை
ஆச்சரியத்துடன் பார்த்தாள் அம்மா !

"வருஷம் முழுவதும்
வேலை வேலை என்று
போகிற நீ
அப்பவாவது என்னோட
ஒரு நாளாச்சும்
இருப்பாய் இல்லையா ?
அதுக்குத்தாம்மா
சாமியிடம் அப்படிக் கேட்கிறேன்" என்று
சொன்ன மகளை
அழுது, கொஞ்சி
தூக்கிக் கொண்டாள் அம்மா !

எழுதியவர் : முத்து நாடன் (19-Oct-12, 11:25 pm)
பார்வை : 144

மேலே