மனசை மற்ற தெரியவில்லையே
இவ்வளவு
நாட்களாக
எனக்காக
துடித்த
இதயம்..
உன்னை பாரத்தபிறகு...
என்னிடமே நடிக்கிறதே...
வேண்டாமென்று
தூக்கி எறிந்து விட்டாய்...!
உன்னுடைய காதலன்
ஒருதலை
காதலன் ஆனேன்..
முடியாதென்று
தெரிந்தும்
ஒரு போதும் உன்னை
பார்க்க கூடாதென
ஒரு தலையாய்
முடிவெடுத்தேன்...
எதிரில்
நீ வரும் போதெல்லாம்
எங்கெங்கோ பார்வையை
திருப்பினேன்...
பார்வை உன் மீது
படவேயில்லை.. - இருந்தும்
தோல்வி என்னை விடுவதாய் இல்லை...
பார்வையை மாற்ற தெரிந்த
எனக்கு...
இந்த பரதேசி
மனசை மற்ற தெரியவில்லையே...
தாயை கண்டதும்
தன்னால் ஓடும்
பிள்ளை போலே ...
உன்னை கண்டதுமே
ஓடிவந்து விட்டதே,
எண்ணமும் இதயமும்...