உன்னோடு பேச முடியாத நாட்கள்

சில நாட்கள் மட்டுமே
பேசியிருக்கிறோம் இருவரும்............
ஒருவருக்கொருவர் காதலை
வெளிபடுத்தவில்லை இன்னமும்................

உன்னோடு பேச முடியா பல
நாட்களில்,
முந்நாளில் நீ!
பேசிய வார்த்தைகளை எல்லாம்
அசைபோட்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்...........

எங்கேனும் மறைமுகமாக
உன் மனதை சொல்லியிருப்பாயா
என்று....................

எழுதியவர் : முகவை கார்த்திக் (22-Oct-12, 5:38 pm)
பார்வை : 232

மேலே