இறைவன்

இருட்டினில் எழுதிட
வெள்ளை மைய் கேட்டேன்!
எண்ணத்தில் நெருப்பினை
இறைவன் கொடுத்தான்!

எழுத்தே நிலையென
வாழக்கேட்டேன்!
எழுதிட எழுத்தாய்
அவனே பிறந்தான்!

விதிகளை மீறும்
வரமொன்று கேட்டேன்!
நானே விதியும்
நானே மதியும்
என்றான்!

எழுதியவர் : (22-Oct-12, 7:19 pm)
பார்வை : 200

மேலே