நண்பா...!

உண்மை
காதலில்
தோற்கும்
போது தான்,
உண்மையில்
ஜெயிக்கிறோம்
நட்பில்...!

இதயம்
உடைந்து
எண்ணம்
சிதறி
கதறி
அழுது
கண்கள்
சிவந்து
வாழ்க்கையை வெறுத்து
விதியிடம் முடிவை தேடும்
போது...!

நம்மை
தேடி பிடித்து
தேற்றி எடுத்து
கட்டி தழுவி
கண்ணீரை துடைத்து விட்டு...!
நம் சோகத்தை
இரவல் வாங்கி
வெளியில் காட்டிக்கொள்ளாமல்
நமக்காக
உள்ளுக்குள் கதறும்
உண்மை நட்பு....!

கண்ணெதிரே துடிக்கும்
இன்னொரு இதயம்...!

நட்பே
தலை வணங்குகின்றேன்...!

எழுதியவர் : (26-Oct-12, 5:20 am)
பார்வை : 487

மேலே