காற்றின் நடனம்

காற்றின் நடனம்
தன்னின் நிலை இழந்து
தறி கெட்டு ஓடியும்
பிறர் மீது மோதிய போதும்
தன் நடனத்தை ஒரு போதும் நிறுத்துவதில்லை !

காற்றின் நடனக் கலையும்
மண் வாசனையும்
கலையோத்து சென்ற பிறகே
மனிதனின் சுவாசத்திற்கு வருகிறது !

புலர் கண்ட பூக்கள் யாவும்
காற்றின் பேச்சை கேட்க்காமல் இருப்பதால் தன்
அந்தி மாலை நேரத்தில்
தன் வாழ்க்கை பயணத்தை முடித்து கொள்கிறது !

எழுதியவர் : வேல் முருகானந்தன் .சி (27-Oct-12, 2:59 pm)
Tanglish : kaatrin nadanam
பார்வை : 166

மேலே