சொந்தங்களே வேண்டாம் பெத்தவங்க போதும்

பொண்ணுதான் பொறக்கனும்னு
பத்து வருசமா தவங்கிடந்து- என்ன
பெத்தெடுத்தா என் அம்மா....!

கூலி வேல செஞ்சி
கடன வொடன வாங்கி- என்ன
படிக்க வச்சார் என் அப்பா....!

காலமும் கடந்துச்சு
பள்ளிப்படிப்பும் முடிஞ்சிச்சு
கல்லூரி என்ன இழுத்துச்சு....!

மேல்படிப்பு நான் படிக்கணும்னு
கலந்தாய்வுக்கு வாக்கான்னு
சித்தி(அம்மாவின் தங்கை) பொண்ண கூப்புட்டேன்....!

படிக்கறது கஷ்ட்டமுன்னு
பணம் கட்ட முடியாதுன்னு
படிக்கவேண்டாமுன்னு சொல்லிபுட்டா....!

வழி ஒன்னும் கெடைக்காம
வாத்தியார தேடிப்போயி
வாங்கையான்னு அழுதேன்.....!

மறுப்பேதும் சொல்லாம
மறுகணமே ஒத்துகிட்டு
வரேன்னு சொல்லிட்டாரு....!

அவரோட ஆலோசனையில
அருமையான கல்லூரியில
ஆசையா சேந்தேன்.....!

அண்ணனுக்கு கல்யாணமுன்னு
அக்காவூட்டுக்கு போனேன்
அன்று நடந்தத மறந்து......!

நான் மட்டும்தான்
நெறைய படிச்சவளா
நெனச்சிட்டு இருந்தேனே...!

எனக்கீடா படிக்க
எப்படிடீ முடிவெடுத்த
என் வீட்டவிட்டு போடீன்னு திட்டி அனுப்பிட்டா....!

அந்த ராத்திரி நேரத்துல
நிலா குளிர்ச்சி தெரில
சூரியனா சுட்டேரிச்சது.....!

அம்மா அப்பாட்ட சொல்லி
அழுதுட்டு இருந்தேன்
அங்கயும் வந்து திட்டனா.....!

கல்யாணம் முடியட்டும்
காலைல போய்ரலாமுன்னு
கலங்காம இருக்க சொன்னாரு அப்பா....!

கண்மூடி நான் தூங்கல
கண்ணீரும் நிக்கவேயில்ல
தன்னந்தனியா நானிருந்தேன் பிள்ளையார் கோவில்ல....!

காலைல எழுந்திரிச்சி
கல்யாணத்துக்கு போறப்ப
மனசு வேணான்னுசு அன்பு வேணுன்னுசு...!

பந்தியில உட்காந்து
பசிக்குதுன்னு சாப்பிட்ட என்ன
எந்திரிக்க சொல்லி எரிஞ்சி விழுந்தா...!

அவ அப்பா அவள அடிக்க
என் அப்பா என்ன அடிக்க
சொந்தமே முரிஞ்சிபோச்சு.....!

என்னக்கா புள்ள வளத்தென்னு
என் சித்தி அம்மாவ கேக்க
உம்புள்ள யோக்கியமான்னு மனசுல மருகிட்டு
வந்துட்டா என் அம்மா.....!

முன்னேற துடிக்கற என்ன
முறியடிக்கற சொந்தமே வேண்டாம்....!

பெத்தபுள்ள போதுமுன்னு
பொறந்த போறப்ப விட்ட -என்ன
பெத்தவங்க போதும்.....!

எழுதியவர் : பா.நேசவேணி (27-Oct-12, 10:31 pm)
சேர்த்தது : nesaveni (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1314

மேலே