தேன்
உன் அழகில் புதைந்தேன்!
உன் மூச்சில் சுவாசித்தேன்!
உன் பேச்சில் விழுந்தேன்!
உன் நிழலில் நடந்தேன்!
உன் கோபத்தில் சிதைந்தேன்!
உன் பாசத்தில் பசைந்தேன்!
உன் பார்வையில் உறைந்தேன்!
உன் கண்ணீரில் நனைந்தேன்!
உன் அன்பில் திளைத்தேன்!
உன் தொடலில் படர்ந்தேன்!
உன் கருத்தில் கரைந்தேன்!
உன் நினைவில் கிடந்தேன்!
இவை அத்தனை உணர்வுகளையும் கிடைக்க உன்னுடன் தொடர்ந்தேன்!
அவை அத்தனையிலும் "தேன்" உள்ளதால்!!