குட்டி சுவரு - காதல்

காத்திருக்கிறேன் தினமும்
அதே குட்டி சுவற்றில்.....
உனது வருகையை எதிர்பார்த்து
ஏரியா நண்பர்களோடு..........

கல்லூரி முடிந்து நீ என்னை
கடந்து செல்லும் வழியில்
உன் கண்கள் என்னை ஏறிட்டுப்
பார்க்கும் அந்த இரண்டு நொடி
நிமிடத்திற்காக......................

குட்டிசுவராவே போகபோகிறான் அப்பா................
அறிவு கேட்டு அலைகிறான் அண்ணன்............
பொண்ணுங்கள நம்பாதே மாப்பிள்ளை..........
பாத்துட்டு கவுத்தி விட்டுருவளுக நண்பர்கள்..................

இவையெல்லாம் தாண்டி மீண்டும்
மீண்டும் அதே உற்சாகத்துடன் என்னை
உட்கார வைக்கிறது உனது ஓரபார்வை
அதே குட்டி சுவற்றின் மேல்...............

எழுதியவர் : முகவை கார்த்திக் (30-Oct-12, 1:48 pm)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 154

மேலே