பிரியமான தோழி,,,,

பிரியமான தோழி,,,,

நீ பிழையாய் அன்றுதிர்த்த அந்த
சில வார்த்தைகளும்,,,என் இதய
தோட்டத்தினுள் கவிதை பூக்களாய்
இன்றும் மலருகிறது

பள்ளிகாலத்தில் உன்
தோளில் சுமந்துவரும்,,
தொட்டாங்குச்சி இசை
வாத்தியம்,,,சிதைந்த
நிலையில் இன்னமும்
நம் பள்ளிகூட சாலயோர
குப்பை தொட்டியில்,,,
உன்னை நினைவு படுத்தி
கொண்டே இருக்கிறது,,,
நாட்கள் அதிவேகமாய்
நகர்ந்துவிட்டாலும்,,,,

சாம்பல் நிற சட்டையும்,,
குட்டை நீல பாவாடையும்,,
மஞ்சள் நிற பையும்,,,
சோற்று சுமக்கும் உன்
தூக்குச்சட்டியும்,,,இன்னும்
வாசம் மாறாத,,,நறுமணமாய்
நம் பள்ளிகூட திண்ணையில்,,,
என் விழி திரைக்கு பின்னால்
ஒரு நினைவோட்டங்களாய்

கூரைகளில்லா வகுப்பறைகள்,,,
காலிழந்த மேஜை நாற்காலிகள்
அதில் சுவடுகளாய் உள்ள
சில பேனாக்கிறுக்கல்கள்,,
திசை கோணத்தால் செதுக்கிய,,
நம் இருவரின் பெயர்களும்
விட்டு சென்ற இடத்தில்,,
அப்படியேதான் வாழ்ந்து
கொண்டிருக்கிறது,,,ஒரு
அழியா காவியங்களாய்,,,

அந்தி மழை வந்து விட்டால் ,,,
ஆசிரியர் மணியடிப்பார்,,,கூடை
கொண்டு குடையாக்கி கோணி
பைய்யை போர்வையாக்கி,,,
நாம் இருவரும் அதற்குள்ளே,,

பழுதுபோன தார்சாலை,,
அதில் தாரை தாரையாய்
மழைநீரோட்டம்,,,அதை
கால்கள் தழுவ உதைத்த படி
கரங்கள் பற்றி கடந்து சென்றோம்,,,,

வீதி விளக்கு பந்தலிலே,,,
சுட சுட அரிசிச்சோறு
ஆ என்று வாய் பிளக்க
அப்படி ஓர் வாசமதில்,,,
ஒரு தட்டு கூட்டுச்சோறாய்
நீயும் நானும்,,, பகிர்ந்து
கொண்டோம்

வெண்ணிலா மகள்
வெளிச்சம் வீசுகிறாள்
கூரையற்ற ஏழை வீட்டு
முட்டத்தின் வழியே
அடம்பிடித்து நீ அமர
நினைத்த என் அன்னை
மடி அன்று உனக்கே
சொந்தமானது,,

இன்று எங்கு சென்று விட்டாய்,,,,
அன்று சுமந்த என் அன்னையும்
இல்லை ,,அன்பு தந்த தந்தையும்,,
என்னோடின்றில்லை ,,,உன்
ஆறுதல்,,தந்த வார்த்தைகள் மற்றும்
காயமாய்,,,,கானல் விழி நீராய்
என் மனதோடு ஏனடி,,தோழி,,,

நான் வாழ்க்கை கரை சேரும்
துடுப்புகளாய் நீ அன்றுதிர்த்த
வார்த்தைகள்,,என்னில்,,

இன்று,,நான் வாழ்க்கை கடலை
கடந்தவனாய் உன்னை தேடுகிறேன்,,,
உன் நட்புக்கரங்களை மீண்டும்
ஒருமுறை பற்றிக்கொள்ளவேதானடி
இந்த புதியதோர் அத்தியாயம்,,

அனுசரன்,,,,,,

எழுதியவர் : அனுசரன் (3-Nov-12, 8:25 pm)
பார்வை : 874

மேலே