உறைந்துபோன இதயம்

ஒரு குளிர்பான கோப்பையில்
இரு குழாய்கள் இட்டு
இருவரும் குடிக்க தொடங்கினோம்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
குடிக்காமல் விட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறோம்
குளிர்பான கோப்பையில்
பணிக்கட்டிகள்
கரையத்தொடங்கியது
இதனைக்கண்ட
காதலின் இதயம் பணிக்கட்டியாய்
உறைந்துபோனது.,,!

எழுதியவர் : Priyamudanpraba (7-Nov-12, 9:12 am)
சேர்த்தது : priyamudanpraba
பார்வை : 173

மேலே