பழையக் குறிப்புகள்
தெரிந்த வழிகள் என்றாலும்
தடங்களைப் பார்த்துப் பார்த்தே வைக்கிறேன்
சுகமாய் கழிந்த கடந்த நொடியால்
கொஞ்சம் கவனம் மிதமானால்
அடுத்த தடத்தில்
தரை தடாகமாகிவிடுகிறது
சிக்கித் திணறும்போதே உணருகிறேன்
உள்ளிழுக்கப்படும் உளவுலகின் பல்லிளிப்புகளை.
மீண்டுவருவது மாண்டுப்போதலின்
மறு திரிபாகும்
புரிந்து எழுந்து வர
செத்த உடம்போன்று
சாகும் உயிரோடு
நடமாடும்
திடமிழந்த தடங்களோடு.
பின் உணர்ந்தெழும்
ஒரு சத்தேறிய சித்த நொடியில்
அதே பாதையில்
தொடரும் அதே பயணம்
முந்தைய பாடங்களின்
முன்னரிச்சரிக்கையுடன்
பார்த்துப் பார்த்து பதியும்
பழையப் பாதங்களில்
புதியத் தடங்கள்.
அவசரம் வேண்டாம்!
அதன் உதாரண அச்சுகளும்
உளவாளிகளிடம் நிச்சயமிருக்கும்.
இன்னும் எச்சரிக்கை தேவை!
இம்முறை
இன்னும் எச்சரிக்கை தேவை!