தற்கொலை

மூன்றாவது வீட்டில்
பாசிமணி போட்டு
ஆட்டி,ஆட்டிவரும்
மாமி சமைத்த
ஊசிப்போன வடையை
ஆசைப்பட்டு தின்று
நாசகார பொறியில்
நச்சென்று சிக்கி
இறந்தும் இறவாத
நிலையில் அவமானம்
தாங்காமல் அந்த எலி
பூங்கா ஓரத்துத்
தொலைபேசி கம்பிதனில்
தூக்கு மாட்டித் தொங்கியது
தெருவினில் திரியும்
சிறுவர்கள் தயவில்.

எழுதியவர் : தா.ஜோசப் ஜூலியஸ் (8-Nov-12, 3:03 pm)
பார்வை : 149

மேலே