நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

மதுரை மகிழ்வோர் மன்ற விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

ஒருவர் ;மொத்தத் திருமணம் நடக்குது என்று போனாய் ஏன் ? சும்மா வந்துவிட்டாய் !
மற்றவர் ;நிறைய பெண் கட்டி வைப்பார்கள் என்று போனேன் .ஒரு ஆளுக்கு ஒரு பெண் தான் என்றனர் வந்து விட்டேன் .
--------------------------------------
ஆசிரியர் ; இந்தியாவின் தேசிய பறவை எது ?
மாணவன் ;கொசு .
-------------------------------------
ஆசிரியர் ;பத்து விரலில் இரண்டு விரல் போனால் என்ன வரும்
மாணவன் ;ரத்தம் வரும் .
---------------------------------------
மருத்துவர் :உங்களுக்கு இருப்பது பரம்பரை நோய் .
நோயாளி ;உங்கள் கட்டணத்தை என் தாத்தாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் .
----------------------------------------
ஒருவர் ; பண்பலையில் வானொலியில் வேலைக்கு சேர்ந்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; ஊதியம் கேட்டால் கேளுங்க ! கேளுங்க ! கேட்டுக் கிட்டே இருங்க ! என்கிறார்கள் .
-------------------------------------------

ஒருவர் ;மதுக்கடையிலும் துணி தைய்க்கும் கடையிலும் கேட்கும் கேள்வி என்ன ?
மற்றவர் ;தெரியவில்லை
ஒருவர் ;ஆப்பா ? புல்லா ?
--------------------------------------------
ஆசிரியை ; பூ வாசம் பிடிக்குமா ? சந்தன வாசம் பிடிக்குமா ?
மாணவி;பக்கத்துக்கு வீட்டு சீனிவாசன்தான் பிடிக்கும் .
-----------------------------------------------
கணவன் ; என்னடி சாம்பார் தண்ணியா இருக்கு .
மாணவி ;நீங்கதானே மதியம் உங்க அம்மா வராங்க என்று சொன்னீர்கள் .
----------------------------------------------
ஒருத்தி ;தீபாவளிக்கு சேலை எடுக்கப் போனது தப்பாப் போச்சு .
மற்றொருத்தி ;ஏன் ?
ஒருத்தி ;சேலை எடுத்து வர சில நாள் ஆகி விட்டது .அதற்குள் என் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து ஓடி விட்டார் .
---------------------------------------------
ஒருவர் ; நீதிபதியை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக அழைத்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; முடிவு சொல்லாமல் தீர்ப்பை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி போய் விட்டார் .
---------------------------------------------
ஒருவர் ; படிச்சுக்கிட்டு இருக்கிற பையனை ஏன் அடிக்கிறீர்கள் .
மற்றவர் ; பரீட்சைக்கு போகாமல் படிப்பதுபோல் நடிக்கிறான் .
-----------------------------------------------

ஒருவர் ;உங்க படத்தில் பைத்தியமாக நடித்தவர் தத்துரூபமாக நடித்து இருந்தார் எங்கே பிடித்தீர்கள் ?
இயக்குனர் ;கீழ்பாக்கத்தில்தான் !
-------------------------------------------------
ஒருத்தி ; என் கணவர் ஒரு லிட்டர் பெட்ரோலை குடித்து விட்டார் .
மருத்துவர் ; 40 கிலோ மீட்டர் ஓடச் சொல்லுங்க சரியாகி விடும் .
--------------------------------------------------
நடத்துனர் ;பேருந்து முழுவதும் பிட்சைக்காரர்களாக இருக்காங்க ஏன் ?
மற்றவர் ; நீங்கதானே சில்லரை இருப்பவர்கள் மட்டும் ஏறுங்க என்றீர்கள் .
---------------------------------------------------
ஒருவர் ; எங்க மருத்துவர் ஒரே நேரத்தில் உயிர்களை காப்பாற்றி விட்டார்
மற்றவர் ; எப்படி ?
ஒருவர் ; அறுவைச்சிகிசையை தள்ளி வைத்து விட்டார் .
-------------------------------------------------

பயணி ;கோவில் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துங்க. .
நடத்துனர் ;தூங்கிக் கிட்டே ஓட்டுற ஓட்டுனரை எழுப்பி சொல்லுங்க .பேருந்தை நிறுத்துவார் .
-------------------------------------------------

தத்துவங்கள் .
ஒருவன் .ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவள் நிழல் கருப்பாதான் இருக்கும் .
---------------------------------------------------
கொசு பல வகை ரத்தம் குடித்தாலும் ரத்த தானம் செய்ய முடியாது.

எழுதியவர் : இரா .இரவி (11-Nov-12, 11:40 am)
பார்வை : 710

சிறந்த நகைச்சுவைகள்

மேலே