தேநீர்க் கடை

‘கன்னித்தீவு’-
ஆர்வத்துடன் பேரன்
ஓரக்கண்ணால் தாத்தா-
*****
தீண்டாமையை
தீண்ட விடாது
டிஸ்போசபுள் கிளாஸ்.
*****
கழுவப்பட்டன
பிரபலங்களின் அந்தரங்கம்
மவுனமாய் கண்ணயர்ந்தது
தேநீர்க் கடை மரத்திட்டு.
*****
சாதிப் பேச்சுகளை
கலைத்துக் கொண்டிருந்தன
ஈக்கள்.
*****
கொதித்துக் கொண்டிருந்தது
நீருடன் ரத்தமும்
சர்க்கரை விலையேற்றம்.
*****
ஏளனமாய் சிரித்தது
கடைச் சுவரில்
கடன் கணக்கு.
*****
பாய்லர் வெப்பத்திலும்
ஆவியாக மறுத்தது
வேர்வைத் துளிகள்.
*****
வட்டிக்காரன்
வாகனச் சத்தத்தில்
உப்புக்கரித்தது தேநீர்…
..............
அணையாமல்
எரிந்துக்கொண்டிருந்தது
விற்பவனின் நம்பிக்கை
மட்டும்.......

எழுதியவர் : சிந்தா (11-Nov-12, 7:26 pm)
பார்வை : 158

மேலே